Posted by K Venkatesh 7288 on 1:13 AM with No comments

பல்லாயிரங்காலத்து பயிர் நீ
   பல்லவன் பேசிய மொழி நீ
காந்தியை கவர்ந்த மனம் நீ -      
என் கம்பன் வளர்த்த மரம் நீ
பாரதி செதுக்கிய சிலை நீ            
பாரே போற்றும் புகழ் நீ
இளங்கோ பெற்ற வரம் நீ
.    இசையாய் பொழிந்த மழை நீ
வள்ளுவன் வகுத்த வழி நீ
.     பலவெளிச்சங்கள் காட்டும் ஒளி நீ
என் தாயும் தந்தையும் வரமே
.     தமிழ் என் உயிருக்கு உரமே

Posted by K Venkatesh 7288 on 1:13 AM with No comments

*புகை, மது மயக்கம்
' நம் உயிரை அழிக்கும்

அயல்மொழி மயக்கம் நம்
இனத்தை அழிக்கும்.

*தமிழில் பேசுவோம்
நம் தலைமுறையைக்
காப்போம்....

Posted by K Venkatesh 7288 on 1:13 AM with No comments

நல்லவர்கள் நல்லது நடக்கவேண்டுமென்று நினைப்பார்கள் --
அது நடக்குமோ நடக்காதோ என்று குழம்பி நிற்பார்கள் !

கெட்டவர்கள் கேட்டது நடக்கவேண்டுமென்று நினைப்பார்கள் --
அது எப்படியும் நடந்துவிடும் என உறுதியோடு நிற்பார்கள் !

எண்ணிய எண்ணியங்கெய்துவர் எண்ணியர்  திண்ணியராகப்பெறின் --
உறுதியான எண்ணம் வெற்றிபெறுவது திண்ணம் என்பது பொய்யாமொழி அல்லவா

Posted by K Venkatesh 7288 on 1:13 AM with No comments

கொச்சைத்தமிழில் கயிதே'ன்னு திட்டினா கோபப் படாதீங்க... !
சுத்தத்தமிழில் மணம்மிகுந்த தாழை மரத்த கையிதை'ன்னு தான் சொல்லுவாங்க..  !

Posted by K Venkatesh 7288 on 1:13 AM with No comments

பல்லாண்டு                          பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரமாண்டு
இப்படி வாழ்த்தும் தகுதிபெற்றவன் தமிழன் !
தமிழனின் தாய்மொழி உண்மையில் பலகோடிநூறாயிரமாண்டு வாழ்ந்த தமிழ் !
வாழ்க தமிழ் இன்னும் பலகோடி ஆண்டுகள் !
வெல்க தமிழ் இன்னும் எத்தனை மொழிகள் முளைத்து வந்தாலும் !

Posted by K Venkatesh 7288 on 1:12 AM with No comments

ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம். எப்பொழுது வேண்டுமானாலும் சாய்ந்து விடலாம் ...!

Posted by K Venkatesh 7288 on 1:46 AM with No comments

விட்டுக் கொடுத்து
வாழ பழகுங்கள்,
இல்லையெனில்
நிம்மதி நம்மை
விட்டுவிட்டு போய்விடும்.

Posted by K Venkatesh 7288 on 5:19 AM with No comments

தட்டிக் கொடுத்தால் தகரமும் தங்கமாகும், விட்டுக் கொடுத்தால் நரகமும் சொர்க்கமாகும்.

Posted by K Venkatesh 7288 on 5:18 AM with No comments

எறும்பிடம் சுறுசுறுப்பையும் , சேமிக்கும் பழக்கத்தையும் மனிதன் அவசியம் கற்றுக்கொள்ளவேண்டும்  நறுக்கென்று கடிப்பதையல்ல , ஆமையிடம் பொறுமை மற்றும் விடாமுயற்சியை கற்கவேண்டும் சோம்பலாக நடப்பதை அல்ல , தேனியிடம் அயரா உழைப்பையும் தியாகத்தையும் கற்கவேண்டும்  பதுக்கிவைப்பதையல்ல . இயற்கையின் பாடங்கள் மிகவும் அற்புதமானவை , கவனித்துப்பார்த்து புரிந்துகொண்டால் வாழ்க்கையும் அற்புதமே .

Posted by K Venkatesh 7288 on 5:17 AM with No comments

மன்னிப்பதால் கடந்த காலத்தில் நடந்தவைகள் மாறாது எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை மாற்றலாம்.

Posted by K Venkatesh 7288 on 5:16 AM with No comments

நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது வாழ்க்கை  மென்மையாகப் பேசும்போது இனிமையாகவும் வன்மையாகப் பேசும் போது கசப்பாகவும் இருக்கும் .புரிந்து கொண்டால் வாழ்க்கை உன்கையில் வளமே உன் வாழ்க்கையில் .

Posted by K Venkatesh 7288 on 5:14 AM with No comments

வெற்றி கதைகளை
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள் மட்டும் தான் கிடைக்கும் தோல்வி கதைகளை படியுங்கள் வெற்றி பெறுவதற்கான புதிய எண்ணங்கள் கிடைக்கும்.
     

Posted by K Venkatesh 7288 on 5:14 AM with No comments

"மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள.. முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது."

Posted by K Venkatesh 7288 on 5:13 AM with No comments

பணக்காரனாக வேண்டுமானால், உழைப்பாளியாய் இரு, புகழ் பெற வேண்டுமானால், உண்மையாய் இரு, நண்பர்களை பெற வேண்டுமானால், தாராள மனப்பான்மையுடன் இரு, மெய்யறிவு பெறவேண்டுமானால், தர்ம சிந்தனையுடன் இரு, வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால், நாவடகத்தோடு இரு.

Posted by K Venkatesh 7288 on 5:12 AM with No comments

தொல்லையாக இருந்தாலும்  தொந்தரவு கொடுப்பதற்கென்றே யாரேனும் அருகில் இருந்து நயநயத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை மிகவும் அழகானது.

Posted by K Venkatesh 7288 on 5:11 AM with No comments

பூ ஒருநாளும் புயலின் வேகத்தை தாங்காது அது துவண்டுவிடும் புல் ஒரு நாளும் நதியின் வேகத்தை தாங்காது  அது படுத்துவிடும் சமூகத்தின் சீர்கேடுகளை நல்லவர்கள் உள்ளம் தாங்காது அது வேதனை மிக கொண்டு வாடிவிடும் நமது பண்பாட்டை நம் கலாச்சாரத்தை நமது மொழியினை மீட்டெடுத்து காணாமல் போன மனிதத்தை கண்டெடுப்போம் மீட்டெடுக்கும் உறுதியோடு .

Powered by Blogger.