Posted by K Venkatesh 7288 on 7:31 PM with No comments
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

Posted by K Venkatesh 7288 on 7:30 PM with No comments
நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.

Posted by K Venkatesh 7288 on 7:29 PM with No comments
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

Posted by K Venkatesh 7288 on 5:28 AM with No comments

வாழ்க்கையில்
உண்டாகும் வலிகளுக்கு,
வார்த்தையில்
இருக்கிறது மருந்து...

Posted by K Venkatesh 7288 on 5:26 AM with No comments

சிக்கல்களை சந்திக்கும் வரை வாழ்வில் மிகுந்த வெற்றி பெற முடியாது
சிக்கனத்தை சிந்திக்கும் வரை வாழ்வில் மிகுந்த பொருள் சேர்க்க முடியாது
சிரிப்பை இதழ்கள் சிந்தும் வரைவாழ்வில் மிகுந்த அன்பை அடைய முடியாது..

Posted by K Venkatesh 7288 on 5:26 AM with No comments

*எப்படியும் வாழலாம்*- இது சில நேரங்களில் வாழ்க்கை கொடுக்கும் வார்த்தைகள். சில நேரங்களில் வாழ்க்கையை கெடுக்கும் வார்த்தைகள்.

Posted by K Venkatesh 7288 on 5:25 AM with No comments

காலத்தை எதிர்பார்த்து  கொண்டு இருக்காதீர்கள்,  காலத்தை எதிர்த்து போராட தயாராகுங்கள்.

Posted by K Venkatesh 7288 on 5:24 AM with No comments

வெளிப்படையானவர்கள் யார் என்ன நினைத்தாலும் அதை பெரிது படுத்திக் கொள்வதே இல்லை...
நிறைய தன்னம்பிக்கை கொண்டவர்களாக காட்சியளிக்கிறார்கள்!!!

Posted by K Venkatesh 7288 on 3:22 AM with No comments

தொழிலாச்சு – உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு
நிழலாச்சு!
வறுமைக்கு மக்கள்நலம்
பலியாச்சு – எங்கும்
வஞ்சகர் நடமாட
வழியாச்சு!

சோகச் சுழலிலே
ஏழைச் சருகுகள்
சுற்றுதடா – கண்ணீர்
கொட்டுதடா
மோசச் செயலாலே
முன்னேற்றம் கண்டோரின்
ஆசைக்கு நீதி
இரையாகுதடா – அன்பை
அதிகார வெள்ளம்கொண்டு
போகுதடா (சோக)

பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத
பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து
இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று
துணியுதடா – நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா

Posted by K Venkatesh 7288 on 3:17 AM with No comments

காற்றை மட்டும்
கடித்துத் தின்ன முடிந்தால்..
யாருக்கும் இருக்காது பசி ! கடலை மட்டும்
அள்ளிக் குடிக்க முடிந்தால்..
யாருக்கும் இருக்காது தாகம் ! தேவைகளை மட்டும்
தீர்க்க முடிந்தால்..
யாருக்கும் இருக்காது தேடல் ! இன்பம் மட்டுமே
வாழ்வாகிப் போனால்
கொஞ்ச நாளில்
இன்பமாய் இருப்பதே
துன்பமாகக் கூடும்… வெயிலும் மழையும்..
இரவும் பகலும்..
கதிரும் நிலவும்..
ஆணும் பெண்ணும்..
தீயும் நீரும்..
சந்தோஷமும் சோகமும்.. புன்னகையும் அழுகையும்..
ஒரு அர்த்தத்தொடே படைக்கப்பட்டிருக்கின்றன… அதனால் எதற்க்கும் முரண்படாது
எளிதாய் ஏற்றுக்கொள்வோம்
அதனை அதன் வழியில்.

Posted by K Venkatesh 7288 on 3:17 AM with No comments

தேனீக்களாய் வேலை செய்வோம்
நத்தையாய் ஊர்ந்தும் செல்வோம்…
நாயாய் நன்றியோடு இருப்போம்
திருட்டுப் பூனையாயும் இருப்போம்…
அன்னமாய் தேர்ந்தெடுத்து உண்போம்
பன்றியாய் பார்த்ததை எல்லாமும்
தின்போம் …
புறாவாய் ஜோடியாய்க் காதலிப்போம்
தெரு நாயாயும் சுற்றித் திரிவோம் …
கிளியாய்க் கொஞ்சிப் பேசுவோம்
சிங்கமாய் கர்ஜனையும் செய்வோம்…
மயிலாய் அழகு காட்டுவோம்
காட்டு எருமையாயும்
பயமுறுத்துவோம் …
கடவுளாய் கருணை செய்வோம்
சாத்தானாயும் சாதனை செய்வோம்…
மனிதனாய் என்று மாறுவோம்
கொஞ்சமாய் அளந்து வாழ்வோம்…

Posted by K Venkatesh 7288 on 3:14 AM with No comments

உறவாக அமைந்தோர் இனிமை
உணர்த்தாது கசந்தே மொழிய,
உளவாக நினைத்த தன்மை,
உறவைப் போல் கடிதில் நீங்க,

உள்ளத்தில் துயரின் இடத்தை,
கோபம் பிடித்துக் கொண்டு விட,
உவந்தே பேசிடும் நாக்கை,
கொடுஞ்சொற்கள் பற்றி விட,

இன்னது தான் பேசுகிறோம்,
இவரிடத்தில் பேசுகிறோம்,
என்பதெல்லாம் மறக்க,
நாவும் சுட்டுப் பொசுக்க,

முடிவிலே வந்த கனத்த மௌனமும்,
புயல் ஓய்ந்த பின் காண்பதை ஒத்திருக்க,
புயலது விளைக்கும் பெருத்த சேதமும்,
உறவினிடை வந்ததை உணர்ந்திருக்க,

இன்னொரு முறையும் எனக்கே நானும்,
சொல்லிக் கொள்கிறேன், இதனையே!
இனி எத்தகு கடின நிலையது வரினும்,
கடைப்பிடிக்க வேணும் பொறுமையே!

Posted by K Venkatesh 7288 on 5:35 AM with No comments

இறந்த பின்பும் சிறைவாசம்,
வீதிகளில் தேசத்தலைவர்களின்
உருவச்சிலைகள்!

Posted by K Venkatesh 7288 on 5:34 AM with No comments

அழகில்லா செல்பிக்களுக்கு
உடனடியாக கிடைத்து விடுகிறது  !!!
- மரணதண்டனை

Posted by K Venkatesh 7288 on 5:32 AM with No comments

வலிகளை தந்த வாழ்க்கை சூழலே அவற்றிலிருந்து மீண்டுவரும் வழிகளையும் தந்துதவிடுமே
தளராமல் இரு துவளாமல் இரு
தன்னம்பிக்கையோடு இரு
இதுதான் வாழ்க்கை உணர்ந்திடு .

Posted by K Venkatesh 7288 on 11:30 PM with No comments

திறந்த புத்தகமாக சிலருடைய வாழ்க்கை இருந்தாலும், அதிலும் மெளனமாக வாசிக்க வேண்டிய பக்ககங்கள் உண்டு.

Powered by Blogger.